பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

அப்புலவர் சங்க காலத்தவர். அவர் பெயரை அறிய முடியவில்லை. நற்றிணை என்னும் நூலைத் தொகுத் தவர் இப்புலவருக்கு ஒரு பெயரைச் சூட்டினார். புலவர் பாடிய ஒரு தொடரையே பெயராக்கினார். தேய்புரிப் பழங்கயிற்றினார்' என்பது அப்பெயர். அப்புலவர் இக் கயிற்றையும் களிறுகளையும் உவமையாக்கி முன்கண்டபடி,

தேய்புரிப் பழங்கயிறு போல” என்று உவமையாகப் பாடினார்.

இது எதற்கு உவமை?

அதனை இக்காலக் காட்சி போன்று காணமுடிகிறது.

'திருப்பூர்ப் பேருந்து நிலையத்தில் ஈரோட்டிலிருந்து வந்த பேருந்து நின்றது. ஒரு கட்டிளங்காளை தயங்கித் தயங்கி இறங்கினான். கால்களில் தள்ளாடிய தயக்கம் பயணத்தை இடையில் தயக்கிக் கொண்டதாகக் காட்டியது. கோவைக்குச் செல்லவேண்டியவன் இடையில் திருப்பூரில் இறங்கி நின்றான்.

அண்மையில் மணம்முடித்து 'அவளின் அன்பையும் இன்பத்தையும் கண்ட புதுமையில் உள்ளான். வாழ்க்கை நடத்தப் பொருளீட்டுவதற்காகக் கோவை செல்கிறான். இடையில் அவன் நெஞ்சம் அவனைவிடவில்லை. அது பேசிற்று :

'முதுகுப்புறத்தே தாழ்ந்து தொங்கும் கரிய இருட்டு போன்ற கூந்தல், சாட்டைக் கயிறாகச் சுற்றி உன்னை இழுக்கின்றது. கண்ணிர் பணித்த கண்கள் வலைக்கண்ணிபோட்டுப் பிணிக்கின்றன. வேண்டாம்; மேலே போகாதே! அவளிடம்போய் அவள் உன்னைப் பிரிந்த இன்னலைத் தீர்ப்போம்: திரும்பு என்று இறக்கிவிட்டது.