பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன 11

ஆனால்,

அவன் அறிவோ இப்படிப் பேசியது :

‘எடுத்த செயலை முடிக்காது தளர்தல் அறியாமை மட்டுமன்று; இகழ்ச்சியையும் தரும். இதுதான் உறுதிப்பாடு. அயராதே; சற்று விரைந்து மேலே பயணம் கொள்; செல்வோம்’ என்று பேருந்திற்கு உந்தியது.

இடையில் தத்தளித்த அவன்,

'உள்ளத்து உணர்வென்னும் களிறு ஒருபுறம் இழுக் கின்றது. மூளையின் அறிவென்னும் களிறு மறுபுறம் இழுக்கின்றது. இரண்டிலும் அகப்பட்ட என் உடலாகிய கயிறு வீழ்ந்து சிதறிப்போகும் போலும் என்று தனக்குத்தானே ஒலமிட்டான்.

இவ்விளக்கம் நற்றிணை 284ஆம் பாட்டின் விரிவாக்கம். ஈரோடு, திருப்பூர், கோவை, பேருந்து ஆகியன எம் இடைச் செருகல்கள். மற்றவை தேய்புரிப்பழங் கயிற்றினார்’ பாட்டின் உள்ளொளி. -

இப்பாடல் ஒரு காதலனின் காதல் தத்தளிப்பை மட்டும் காட்டவில்லை. ஒர் உயிரியல் கருத்தைத் தருகிறது.

'உணர்வும் அறிவும் மாறுபடுமானால் வீழ்ச்சிதான் நேரும்’ என்பதை நயமாகக் காட்டியுள்ளது.

மாந்தரின் வாழ்வியக்கம் மட்டுமன்று, உயிர் இயக்கமும் உணர்வையும் அறிவையும் கொண்டே நிகழும் உணர்வும்