பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

அறிவும் மாறுபடக்கூடாது. ஒன்றையொன்று தழுவிச். செல்ல வேண்டும். இங்கு மாறுபட்டன.

உணர்வைத் தாழ்த்தும் அறிவு

பெருமன்னன் அக்பர் நல்ல கல்விமான், அதற்கு. நிகரான ஒழுக்கசீலன். எச்சிறு தீய பழக்கமும். இல்லாதவன். அவன் அவைக்கவிஞன் பீர்பால் நல்ல அறிஞன், கவிஞன், நயமான பேச்சுக்காரன், தீய பழக்க மாகிய புகையிலையைப் பயன்படுத்துவதை விடாதவன். -

ஒருநாள் இருவரும் உரையாடியவாறே உலாப் போந்தனர். ஒரு புகையிலைத் தோட்டத்தின் வழியே நடந்தனர். அங்கே ஒரு கழுதை புகையிலையை நோக்கி விரைந்து வந்தது. நெருங்கியதும் புகையிலையை மோந்து பார்த்து உதடுகளைப் பிதுக்கிக் கொண்டு திரும்பியது. இதனைப் பயன்படுத்த நினைத்த அக்பர்,

பார்த்தீரா பீர்பால்; கழுதைகூட புகையிலையை. வெறுக்கிறது, என்றார். உடன் பீர்பால்,

ஆம்! கழுதைதான் புகையிலையை வெறுக்கும்’ என்று எதிர்ச்சாடல் வீசினான். இந்த எதிர்ச்சாடலில் அறிவு முனைப்பாக வேலை செய்துள்ளது. ஆனால், நல்லுணர்வு வலிமையற்றுத் தோற்றது. உணர்வு தாழ்த்தப்பெற்று அறிவு முனைப்பானால் நன்மை பிறககாது. அதற்கு இது எடுத்துக்காட்டு.

அறிவை மீறிய உணர்வு

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தன்

அவையில் நாடகக் கூத்தியரின் அழகுக் கூத்தைச் சுவைத்து.

முகம் மலர்ந்தான். அண்மையிலிருந்த கோப்பெருந்தேவி,