பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் 13.

மன்னன் கூத்தியைச் சுவைத்ததாக ஊடல் கொண்டாள்.

'தலைநோய் வருத்தம் தன்மேலிட்டு’ப் படுக்கையிற் கிடந் தாள். அவளை மன்னன் கண்டு தாழ்ந்து பல ஏத்தி'யும் ஊடல் தணியவில்லை. அந்த உணர்வுக் கொப்பளிப்புடன் வெளியே வந்தான். இந்நேரம், பொய்யன் பொற் கொல்லன் களவுபோன சிலம்பு கண்டேன்; கள்வனும் உள்ளான்” என்றான். ஆராய்ந்து அறிய வேண்டிய மன்னனை அவன் உணர்வு அழுத்திவிட்டது. அறிவை அமுக்கிவிட்டது. அறிவறை போகியன் ஆனான். அறிவை அமுக்கிய உணர்வினால் கொன்று அச்சிலம்பைக் கொணர்க’ என்றான். அவ்வாறே செய்தனர். முடிவு என்ன ஆயிற்று? அறிவு உணர்ச்சிக்கு ஆட்பட்டதால் "தாழ்ந்த குடையினனானான்; தளர்ந்த செங்கோலினன் ஆனான்; வீழ்ந்து இறந்தான். '

இது, உணர்வு அறிவை மீறியதால் நேர்ந்த அவலத் திற்குச் சான்று.

ஒன்றையொன்று தழுவல்

எனவே, உணர்வும் அறிவும் மோதிக்கொள்வதும் தீது, ஒன்றில் ஒன்று ஆட்படுவதும் தீது; ஒன்றை ஒன்று தழுவிச் செல்வதே நலமாகும் இந்த உண்மையின் படைப்பே திருக்குறள். மக்களது உணர்வையும் தெளிவாக்கும் ஆழ்ந்த ஆய்வின் வெளிப்பாடே திருவள்ளுவம் என்னும்

திருக்குறள்.

வள்ளு வத்தில் உணர்வும் அறிவும்

அரம் போலும் கூர்த்த அறிவிருக்கலாம். ஆனால்: அது பிறிதின் நோயைத் தன் நோய்போல் உணர்ந்து

1. இளங்கோவடிகள் : சிலம்பு : வழக்குரை-73