பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பகுத்தறிவு

உயிரின் படிமுறை வளர்ச்சியைப் படிப்படியாக மலர்த்தி ஐயறிவுயிர் என்றும் ஆறாவது அறிவு பெற்றவன் மாந்தன் என்றும் உயிரியல் பாங்கைத் தமிழர் கண்டனர். இதனை யும் உணர்வாலும் அறிவாலும் தாம் கண்டனர்.

ஆறாவது மன உணர்வு-உணர்வு.

ஆறாவது பகுத்தறிவு-அறிவு என நிறைவாக்கினர். உணர்விற்குக் களம் மனம். அறிவிற்குக் களம் மூளை, அம்மூளை உணர்விற்கும் தூண்டுகோல். இவ்விரண்டையும் கூர்ந்து கண்ட திருவள்ளுவர் உணர்வு கண்டபடி பாயும், அப்பாய்வு தீமையையும் அடையலாம்; நன்மையையும் அடையலாம். அறிவுதான் அந்த உணர்வைச் சென்ற இடத்தாற் செலவிடாது தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு' (422) என்று விதித்து அதுதான் அறிவு” என்றார்.

முன்னைச் சான்றோர் நன்மை தீமைகளை அறிவது தான் அறிவு என்பதை அறிவு என்னும் சொல்லால்தான் குறித்தனர். பகுத்தறிவு என்னும் சொல்லைக் காண வில்லை. மேற்கண்ட குறள்தான் நன்மை தீமைகளைப் பகுத்துப் பார்த்து உணர்வை இயக்குவதுதான் அறிவு என்றது. அதனைத்தான் நாம் பகுத்தறிவு” என்கிறோம்.