பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 17

"பகுத்தறிவு” என்னும் சொல் திருக்குறளில் இல்லை என்றாலும், இச்சொல்லை ஆக்குவதற்கு வழி காட்டுவது போன்ற சூழல் உள்ளது.

'அறிவு என்னும் சொல் பல அடைமொழிகள் பெற்றுத் திருவள்ளுவரால் வழங்கப்பெற்றுள்ளது. "வாலறிவு (2): பேரறிவு (218); புல்லறிவு (246); உண்மை அறிவு (513): உள்ளறிவு (677); ஆயும் அறிவு (198) என்றெல்லாம் உள்ளன. இவை போன்று பகுத்து அறிவு; பகுத்தறிவு' என்னும் சொல் பின்னர் ஆக்கம் பெற்றுள்ளது. இங்கு அறிவிற்கு அடைமொழியாக அமையப்பெற்ற பகுத்து என்பது வேறு சில சொற்களுக்கும் அடைமொழியாக அமைந்துள்ளதையும் காண்கிறோம். பகுத்து ೭೯r@ (322) என்று திருவள்ளுவத்திலும், 'பகுத்து ஊண்' என்று பதிற்றுப்பத்திலும் உள்ளன. இவ்வழியில் பகுத் தறிவு' என்னும் சொல்லும் அமைந்தது,

"பகுத்து’ என்பது செய்யுள் அமைப்பில் பாத்து’ என்று அமையும். 'பாத்துரண் மரீஇயவனை' (227) என்று திருவள்ளுவரும் பாடினார். இப் பாத்து என்னும் சொல் லமைப்புடன் முன்றுறையரையனார் தம் பழமொழியில்

'பாத்தறிவு ஒன்று இன்றி” என்று பாத்தறிவு என்று ஒரு சொல்லாக்கம் செய்தார். இதன் மாற்றுருவாக்கமாகப் பகுத்தறிவு” என்னும் சொல் உருவாகியுள்ளது.

'பகுத்தல்’ என்றால் பிரித்தல்-பிரித்துப் பார்த்தல் என்று பொருள். நன்மை, தீமையைப் பிரித்து-பகுத்துப் பார்க்கும் அறிவு என்பதே பகுத்தறிவு” என்பதன்

1. காப்பியாற்றுக் காப்பியனார்: பதி: 38-15 2. முன்றுறையரையர்: பழ: 384