பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

பொருள். பகுத்தல்’ என்னும் சொல்லின் பகுதி பகு’. இதன் அடித்தளச் சொல்லை அறிமுகம் செய்வது போன் றும், அதனைப் பலவகையாக வளர்ப்பது போன்றும் உள்ள அமைப்பைத் திருவள்ளுவத்தில் காண்கிறோம்.

பகவன்

இந்தப் பகு’ என்பதற்கு வேர்ச் சொல் பள்' என்பார் மொழியறிஞர் பாவாணர். பகு' வில் எழுந்த அடுத்த அடித் தளச்சொல் பக்’ என்பது. நெஞ்சு பக், பக்’ என அடித்துக் கொள்கிறது என்று வாய்வழக்கில் கேட்கிறோம். இவ்வாறு விட்டு விட்டுப் பிரிந்து பிரிந்துப் ஒலிப்பதைப் பக்' என்பது போன்று, கூடியிருந்தவை பிரிவதைத் திருவள்ளுவர் பக்கு என்னும் சொல் வைத்துப் பக்குவிடும்’ (1068) என்றார். இந்தப் பக்கு’ - பகு, பக என்றாவதையும் 'பகச் சொல்லி’ (187) என்பதில் காண்கின்றோம். இந்தப் பக' என்னும் வினைச்சொல் பகவு' என்னும் பெயர்ச் சொல்லாகத் திருவள்ளுவரால் ஆளப்பெற்றுள்ளது. மிகச் சிறிய அளவிற்குத் தினை அரிசியைக் கூறுவார். அதனினும் சிறிய அளவைக் குறிக்க எள்ளின் பகு'வைக் கூறினார். எள் பகவு - எட்பகவு அன்ன சிறுமைத்து’’ (889) என்றார்.

இந்தப் பகவு’ என்பது பிரிவு, பிளவு, பகுப்பு என்று பொருள்படும். இவ்வாறு நன்மை, தீமையைப் பிரித்து. பகுத்து அறிவிப்பவன் பகவு + அன் = பகவன்’ எனப் பட்டான். திருவள்ளுவர் தம் முதற்குறட்பாவில் பகவன்’ என்னும் பெயரை இறைவனுக்குச் சூட்டினார். பின்னர் வகுத்தான் (377) என்றும் அமைத்தார்.

தகவு + அன் = தகவன் - தகவர், நடுவு + அன் = நடுவன்நடுவர் என்றெல்லாம் அமைவது போன்று பகவு+அன்