பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

இக்காலத்தில் பகுத்தறிவுக் கொள்கைகள்

இக்காலத்தில் பகுத்தறிவு” என்பது பெரியார் ஈ.வே.ரா. அவர்களால் தான் மிகுதியாகக் கையாளப் பட்டது. பகுத்தறிவு என்று ஓர் இதழுக்குப் பெயரிட்டார். பகுத்தறிவாளர்' என்றால் பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுபவர்' என்றே கொள்ளப்படுகின்றது. பெரியார்

கண்ட பகுத்தறிவுக் கொள்கைகள் எவை?

1. கடவுள் மறுப்புக் கொள்கை

2. சாதி ஒழிப்புக் கொள்கை 3. மூட ஒழிப்புக் கொள்கை

என்று மூன்றாக அமையும்.

பகுத்தறிவுக் கொள் கையும் திருவள்ளுவரும்

இம்மூன்று பகுத்தறிவுக் கொள்கைகள் திருவள்ளுவர்க்கு உடன்பாடா? இவ்வினா மூன்றிற்கும் முழுமையாக ஒரே விடை சொல்ல இயலாது.

ஒன்று, கடவுள் மறுப்புக் கொள்கையில் திருவள்ளுவர்க்கு உடன்பாடு இல்லை. (இங்குக் கடவுள்' என்ற சொல்லைப் பொதுவாக நாம் வழங்கும் வழக்கை வைத்தே குறித்துள் ளேன். அதற்குரிய தனிப்பொருளில் அன்று.)

இரண்டு, சாதி ஒழிப்புக் கொள்கையில் திருவள்ளுர்க்கு உறுதிப்பாடு உண்டு.

மூடமறுப்புக் கொள்கையில் திருவள்ளுவர்க்கு உண்டு. -