பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"22 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

அவர் தம் சொற்களையும் கருத்துக்களையும் கொண்டு அறிவித்தால் இவ்வாறு சொல்லவேண்டும்; தமிழகத்தில்அதன் தொடர்பில் உலகத்திலும் நேர்ந்து அமைந்துள்ள வற்றை ஆழ்ந்து கண்டுள்ளார். உலகத்தோடு ஒட்ட ஒழு கலைக் கடைப் பிடித்துள்ளார். அந்த ஒட்ட ஒழுகலோடு உரிய மாற்றுக் கருத்துக்களையும் பதிந்துள்ளார். பல்வகை யாகப் பரவி இருந்த கருத்துக்களில் அவர்க்கு ஒத்துவையும் இருந்திருக்கலாம்: வேறுபட்டனவும் மாறுபட்டனவும், முரண்பட்டனவும் காணப்பட்டிருக்கலாம். ஆனால், அவற்றுள் மக்கள் நன்மைக்கு ஒத்துவரும் கருத்தை அறிந்து எடுத்துக் கொள்ளும் உரோட்டமான கருத்துணர்வை மேற் கொண்டுள்ளார். ஒத்ததறிவான் உயிர்வாழ்வான்' (214) என்பது அவர் விதிப்பு அன்றோ? அவ்வாறு அறியாது செத்த கருத்தாளராக அவர் இலர். அத்துடன் ஒவ்வாதனவற்றை ஒதுக்கி வைத்துக்கொண்டு உரிய இடத்தில் அதனை எதிர் மறையாக வைத்து விளக்கும் முறையையும் கைக் -கொண்டுள்ளார்.

இவ்வாறு கொள்பவர் என்பதை,

'உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு (425)

என்னும் அவர்தம் சொல்லாலே உணரலாம். அறிவொளி உலகத்தைத் தழுவியது. உலக வழக்கிலும், பழக்கிலும் காண்பவற்றிற்காகத் தம் அறிவை மலர்த்தாமலும், கூம்பாமலும் ஒரே சீராகப் பயன்படுத்தியுள்ளார்.

வகுத்தறிவு முனை

இத்துணையளவு ஒரு வகையான முன்னுரை தருவது இங்கு வேண்டப்படுவதாகும். இம்முன்னுரையான அடித்