பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இறைவன்-கடவுள்-தெய்வம்

இக்கொள்கையில் புகுமுன் பொதுவாக நாம் வழங்கும் கடவுளைக் குறிக்கும் சொற்களைக் காணவேண்டும். பல பட விரிந்துள்ள அச்சொற்களில் கரணியம் கொண்ட கதை தழுவிய சொற்களை விடுத்துத் தனித்தன்மையுள்ள சிறப் பான சொற்களைக் காணவேண்டும். அவை,

இறைவன்,

கடவுள்,

தெய்வம்-என்னும் மூன்றாகும். இவை மூன்றும் வெவ்வேறு தனித்தனி உட்பொருள் கொண்டவை.

இறைவன்

இறைவன் என்னும் சொல்லின் வேர்ச்சொல் இல்: என்பது. இருப்பிடம்-இல்லம் என்னும் பொருள் கிளைத்து. இல்+த்+ஐ என்பனவற்றின் கூட்டே இறை. அந்த இறைத்தன்மையுடையவன் இறைவன். அவன் மூல முதலாக, முடிவு இறுதியாக அமைய இறுதி-இறு: என்னும் பொருள் இணைப்பையும் உடையவன் இல்இல்லை என்னும் எதிர்மறைப்பொருள் அதன் இயல்புப்