பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் • 25

பொருள் அன்று. பின் காணப்பட்ட பொருள். இவ்வாறு அனைத்திற்கும் மூலமான இருப்பிடத்தை -இல்லை. உடையவன் என்பதே இறைவன் என்றதன் பொருள். அவ்வாறெனில் மூலமான முதல்வன்; உருவற்றவன், வடிவம் கொள்ளக்கூடாதவன் என்பதே இறை-இறைவன் ஆகம். அவ்வாறாயின் 'அன்' என்னும் ஆண்டாலாக ஏன் கூறவேண்டும்(?) என்று வினவலாம். அது தான் உலகம் தழியது. உலக வழக்கில் எதையும் உருவகமாகவும் பெண்ணையும் தழுவிய ஆணாகவும் கூறுவது பழமை

மரபு.

ಈ ೬ ೯೬ ಕಃ

கடவுள் என்னும் சொல் கட+ உள்-கடந்து உள்ளே உள்ளது” என்னும் பொருள் கொண்டது. அவ்வாறே பலரும் கொண்டனர். மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் கடவுபவன்-செலுத்துபவன் என்றாகலாம்” என்றார் . இவ்வாறு சொற்கள் அமைவதை இயவுள், செய்யுள், அக்குள் எனும் சொற்களும் காட்டுகின்றன. இயங்க வைத்து உள்ளே இருப்பது இயவுள். செய்யக் கருதியதை செய்து வைக்க உள்ளாக இருப்பது, செய்யுள். இரண்டு உறுப்புக்களின் இணைப்பின் உள்ளிடமாக இருப்பது, அக்குள். (அக்கு-இணைப்பு-'அக்கு வேறு ஆணிவேறாக என்னும் வழக்கை அறிவோம்.) -

இவ்வாறமைந்த கடவுள் எதைக்கடந்தது? காணப் படும் உருவத்தைக் கடந்தது. கடந்து உள்ளே-அவ்வுருவத் தின் உள்ளேயோ, காண்பவரின் மனத்துள்ளேயோ இருப்பது என்று விரியும்.

1. தேவநேயப் பாவாணர் ஞா : சொல். கட். பக்கம்

இப-2 33-அடிக்குறிப்பு

ععصبه إلي .