பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

அதிலும் இறந்த பின்னரும் ஆவியாக வானத்தில் வாழ்பவ. னாக ஆகிறான். அவன் வானுறையும் முன்னையப் பல தெய்வங்களுக்கு ஒப்பாக- தெய்வமாகவே வைக்கப்படும் என்றார். ‘வாழ்பவன்’ என்று உடலும் உயிரும் கூடிய கூட்டான ஆண்மகனாகக் குறித்தார். உடல் பிரிந்த, உயிரை ஆண்பாலால் கூறாது அஃதாவது வைக்கப் 'படுவான்' என்று முடிக்காது வைக்கப்படும்’ என்று. பொதுவில் உயிரை மட்டும் கருதிக் குறித்துள்ளமை, கூர்த்து நோக்கத்தக்கது. எனவே, தெய்வம் என்பது சிறக்க வாழ்ந்து இறந்த மாந்தனின் நிறை நிலையையே குறிப்பதாகும்.

  • இறைவன் - அருவமாய் முதல் மூலவன் 棘 கடவுள் - உருவமாய் உலவுபவன் * தெய்வம் - நிறைவாக வாழ்ந்த நிலமாந்தன்

பொதுவில் கடவுள் என்னும் கருத்தில் சொல்லப்பெற். றாலும் மூன்றும் வெவ்வேறானவை என்பதை நினைவில் நிறுத்தவேண்டும்.