பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

யும் பல இடங்களில் பெய்து வைத்துள்ளார். இதன்படி வாழ்க்கைத் துணைநலத்தின் ஈற்றில்,

'மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் கன்மக்கட் பேறு' (60)

என்னும் குறள் வைத்தார். இக்குறளின் ஈற்றுத் தொடர் "மக்கட் பேறு (குழந்தையைப் பெறுதல்). எனவே அடுத்த அதிகாரம் மக்கட்பேறு அதிகாரம். அதன் தலைப்பு 'மக்கட்பேறு என்பதேயாகும். ஆனால், புதல்வரைப் பெறுதல் என்றுள்ளமை மாற்றம் பெற்ற தலைப்பேயாகும்.

முன் அதிகாரத்தில் மட்டுமன்றி நூலில் எங்கும் புதல்வர் என்னும் சொல் இல்லை. இல்லாமல் எவ்வாறு புதல்வரைப் பெறுதல் வந்தது? எனவே, ‘மக்கட்பேறு’ என்பதே திருவள்ளுவர் தொடர், -

கடவுள் வாழ்த்து

இது போன்றதே திருக்குறளின் முதல் அதிகாரத்தின் பெயரும் ஆயிற்று. அது 'கடவுள் வாழ்த்து' என்றிருத்தலை அறிவோம். இத்தொடர் திருவள்ளுவர் அமைத்ததா என்றால் புதல்வரைப் பெறுதலுக்குச் சொன்னவற்றையே கொள்ளவேண்டும். திருக்குறளில் எங்கும் கடவுள்' என்னும் சொல் இல்லை; திருவள்ளு வரால் ஆளப்படவில்லை. பின் எவ்வாறு 'கடவுள் வாழ்த்து’ வந்தது? முதல் அதிகாரத்தில்

'இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார்’ (5)

"இறைவன் அடிசேராதார்" (10).