பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

பழைய இலக்கியக் கருத்தைக் கொண்டும் முந்தைச் சான்றோர்தம் சொற்களைக் கொண்டுமே உரையாசிரியச் சான்றோர் எழுதுவர். எனவே கடவுள் வாழ்த்து' என்று இலக்கணஇலக்கியத்தில் உள்ளமை கொண்டு அமைத்தனர்.

ஆனால், திருவள்ளுவர் சொல்லாட்சிதனை ஏனோ மறந்தனர். உரையாசிரியர்களா மறப்பர்? தம் கருத்தைப் புகுத்தும் கரணியமாகவும் மறதியுள் புதைத்திருக்கலாம்.

'கடவுள்' என்னும் சொல் தமிழ்ப் பண்டை நூல்களில் பெரு வழக்கான சொல். தொல்காப்பியத்தில் மூன்று இடங் களில் வருகிறது. பத்துப்பாட்டுப் பாடல்களில் 12இடங்களில் உள்ளது. எட்டுத்தொகை நூல்களில் 73 இடங்களிலும் பதினெண்கீழ்க்கணக்குகளில் 2 இடங்களிலும் சிலம்பில் 24 இடங்களிலும் மணிமேகலையில் 12 இடங்களிலும் உள்ளது.

ஆனால், திருக்குறளில் இச்சொல் அறவே ஆளப்பெற வில்லை. கடவுள் என்னும் சொல்லைக் கொள்ளாததால் திருவள்ளுவர் கடவுளே இல்லை என்றுள்ளார் என்ற மலிவான கருத்தைக் சொல்லக்கூடாது.

அடி: தாள் ?

‘கடவுள் உருவமுடையது;

அதனைக் குறிக்க வேண்டாம்'

என்று விடுத்திருப்பார். அவ்வாறானால் முதல் அதிகாரக் குறட்பாக்களில் அடி என்றும், தாள்' என்றும் அ றிவன், ஏசினான், இறைவன் என ஆண்பாவிலும் குறித்தமை உருவகக் குறிப்புதானே எனலாம். .