பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 33

திருவள்ளுவர் இறையை எட்டுக் குணங்களாகத்தான் குறித்தார். அக்குணங்களின் உருவகமாகவே மேற்கண்டவா றெல்லாம் கூறினார். அவையெல்லாம் குணங்களிள் உருவகமேயன்றி மூலத்தில் உருவம் அல்ல.

'அடி’ என்றும் தாள்’ என்றும் உடல் உருவ உறுப்புக் களைக் கூறியுள்ளாரே என்றால், அவையும் குணத்தின்செயலின் உருவப்பாடுகளே. -

குணங்களை மேற்போக்காகவோ, நுனிப்புல் மேய்வ தாகவோ, கொள்ளக்கூடாது. முழுமையாகக் கொள்ள வேண்டும். ஆழமாகக் கொள்ளவேணடும். குணங்களின் அடித்தளம் வரை கண்டு கொள்ளவேண்டும். அடிவரைதாள் வரை உணர்ந்து கடைப்பிடிக்கவேண்டும். இஃதே திருவள்ளுவர் நோக்கம். என்வே, ஆழமாக, அடிவரை, என்பனவற்றைக் குறிப்பனவே அடி, தாள்' என்னும் சொற்கள்: நேரடியான உறுப்புக்களை அல்ல. -

திருவள்ளுவர் குறித்த மற்றவற்றையும் காணவேண் டும். உருவம் உள்ள உருவங்கொண்டு உலவிய கடவுளரைக் குறிப்பாகவும், அவரவருக்கு உரிய சொல் கொண்டும் குறித்துள்ளமையையும் பரவலாகக் காண்கிறோம்.

'பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு புவர்’’ (580)

என்னும் குறளில் நஞ்சுண்ட சிவபெருமானைக் குறிப்பாகக் கூறியுள்ளார் என்பர். இஃது ஆய்விற்குரியது.

மேலும்,

“அடியளந்தான்' *தாமரைக் கண்ணான்' எனத் திருமாலையும்,