பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

  • தாமரையினாள்' செய்யாள்'

எனத் திருமகளையும்,

'தவ்வை' 'மாமுகடி’

என மூதேவியையும்

'கூற்றம்'

என்று காலனையும் வைத்துள்ளார் என்பது உண்மையே.

உருவத்தைக் கடவுள் தொடர்பில் வேண்டாதவர் ஏன் இவ்வாறெல்லாம் அமைத்தார்? இங்குதான் ஒர் அடிப்படை உண்மையை உணரவேண்டும். இதனை அடிப்படை உண்மை என்பதைவிட மக்களை அவர் போக்கில் திருத்தும் உத்தி’ என்பதே பொருந்தும்.