பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் - 41

திருவள்ளுவரின் அணுகுமுறை

பின்னர், எந்த நோக்கில் அல்லது முறையில் நினைக்கத் தகாததும் தாழ்ந்ததுமான கள்ளைத் திருவள்ளுவர் உவமை யாக்கினார்?

அதுதான் திருவள்ளுவரின் அணுகுமுறையாகின்ற்து: மக்களைச் செம்மைப்படுத்தவே திருக்குறளைக் கருவியாகக் கொண்டார், அஃதே திருவள்ளுவரின் குறிக்கோள். அதற்கு மக்களை உணர்வு வழியிலும், அறிவுப் பாங்கிலும் இட்டுச் செல்வதே அவர்தம் நோக்கம். மக்களின் செம்மை’ என்னும் தம் கோட்பாட்டைக் குறியாகக் கொண்டு அது மக்களால் புரிந்து கொள்ளப்பட்டுக் கைக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கேற்ற அணுகு முறையைத் தேர்ந்து கொண்டார். மக்களுக்கு நன்கு தெரிந்துள்ள ஒன்றைக் காட்டிப் புரியவைக்க வேண்டும்; அதற்குத் தாம் விரும்பாத ஒன்றையும் எடுத்துக்காட்டிப் புரியவைப்பதே திருவள்ளுவர் அணுகுமுறை. -

பாவேந்தர் பாரதிதாசனார் தாம் விரும்பாத பாரதம், சுண்ணன். கற்பனை உலகம் முதலியவற்றைப் பாரதியின் திறனைக் காட்டுவதற்குக் கையாண்ட அணுகுமுறை இது போன்றதே. திருவள்ளுவர் வழியில் பாவேந்தர் கையாண் டிருப்பினும் இக்கால நிலையில் பாவேந்தரைக் காட்டித் திருவள்ளுவரைக் காணவைக்க நேர்ந்தது. வேர் மறைவாக மண்ணுக்குள்தானே உள்ளது! காட்சியளிக்கும் மரத்தைக் கொண்டு தானே வேரின் உண்மை புரிகிறது. -

இந்த அணுகுமுறை நோக்கோடுதான் திருவள்ளுவரின் பகுத்தறிவுப் பாங்கை உணர, அவர்தம் அணுகுமுறையைக் கொள்ள வேண்டியுள்ளது. . . .

இதன்படி பகுத்தறிவுக் கொள்கைகளாகக் கூறப்பட்ட மூன்றில் கடவுட் கொள்கை’ பற்றி முதலில் காண்போம்.

தி ப-3