பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் . . . . 45

திருக்குறளுக்கு முன்னர் என்னுாலிலும் பகவன்' என்னும் சொல் இல்லை. திருக்குறளை ஒட்டிய

அல்லது அடுத்துத் தோன்றிய இன்னா நாற்பது என்பதில் அதன் கடவுள் வாழ்த் தில் மட்டும் ஓரிடத்தில் 'முக்கட் பகவனைத் தொழாமை இன்னா என்று பகவன் என்னும் சொல் சிவபெருமானுக்கு ஆளப்பட்டது. பின் வந்த நூல் களிலும் நிகண்டுகளிலும் பகவான் பல கடவுளர்க்கும் பெயர் ஆயிற்று.

இவற்றையெல்லாம் ஒன்று கூட்டி ஆழ்ந்து நோக்கி னால்-சிறப்பாக இறைவன் சொல்ஆட்சியையும் பகவன்’ சொல்லாக்கத்தையும் நோக்கினால் திருவள்ளுவரின் பகுத்தறிவு நோக்கம் புலனாகும். இவை முதலில் குறிக்கத் தகும் இரு பகுத்தறிவு முனைகள்.

மன்னனும் இறை

இறை, என்னும் சொல்லைக் கடவுட் குறிப்பிலும்,

மன்னன் பொருளிலும் பொருத்திக் கையாண்டுள்ளமை ஆராயத்தக்கது. மன்னனுக்கும் கடவுளுக்கும் இணையாக ஆளப்பட்டுள்ளதா? ஏற்றத்தாழ்வாக ஆளப்பட்டுள்ளதா? இரண்டுமன்றிக் குறிப்பாக மன்னன் பொருளில் சற்றுப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளதா? இவ்வினாக்களுக்கு உரிய விடிைகாண இரு பொருள்களிலும் கையாளப்பட்டுள்ள இடங்களையும், கருத்துக்களையும் காணவேண்டும்.

முதலில் அதிகாரப் பெயரை நோக்க வேண்டும். முதல் அதிகாரத்தின் பெயர் பின் வந்த உரையாசிரியர்களால் மாற்றப்பட்டது என்று கண்டோம். திருவள்ளுவர் 'இறை. வணக்கம் என்று முதல் அதிகாரத்திற்குப் பெயர் கொடுத் திருக்கலாம் என்றும் கண்டோம். (பக்கம் 30). இது

1. கபிலர் : இன்னா : 1-1