பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

கடவுளரை உரைத்துள்ளார். அவற்றை ஒவ்வொன்றாகச்

சீர்தூக்க வேண்டும்.

'பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் கயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்' (580)

என்னும் குறளிலுள்ள பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர்" என்பது சிவபெருமானைக் குறிப்பாகக் கூறுவது என்பர். இது கொண்டும் திருவள்ளுவர் சிவ சமயத்தவர் என்று எழுதினர்; பேசினர். 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் என்று நற்றிணைப் பாடலிலும் கண்ணோட்டம் கருதிநண்பருக்காக நஞ்சையும் உண்பர் என்றுள்ளது. இரண்டு இடங்களுமே 'கண்ணோட்டம் பற்றியது, சிவபெருமான் நஞ்சை உண்டார்; உயிருடன் அமைந்தார்’ என்னும் கதையில் நஞ்சு ஊற்றிக் கொடுக்கப்படவில்லை. கடும் பாம்பு கக்கிய கொடிய நஞ்சு தேவர்களை விரட்டிவர அவர் களுக்காகச் சிவபெருமான் அதனைக் கையால் எடுத்து வாயிலிட்டார்’ என்பதே கதை. -

எனவே, இக்குறள் சிவபெருமான் பெருமை கூறுவது

அன்று. சிவனைப் பற்றிய எக்குறிப்பும் திருவள்ளுவத்தில் இல்லை.

பகடிக்குள் திருமால்

திருமாலைக் குறிப்பிடும். குறட்பாக்கள் உள்ளன. ஒன்று தாமரைக் கண்ணான்’ என்பது.

அழகும் அன்பும் தெளிந்த மனைவியைப் பெற்ற மணாளன் ஒருவன் தனக்குத்தானே பூரித்துப் புன்முறுவல்

1. .. : நற் : 355-6.7