பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 49

பூத்தபடி நடந்தான். அவனை நெற்றியில் வெள்ளையும் செம்மையுமாகத் திருமண் தீட்டிய திருமாலிய அடியார் கண்டார். "ஏனப்பா! அப்படி என்ன பெரிய இன்பம் கண்டாய்? உனக்கு நீயே யூரிக்கிறாயே’ என்றார்.

அவன் வினா ஒன்றைத் திரும்ப ஏவினான். பெரிய வரே! தாங்கள் எத்தனைப் பெரிய இன்பம் என்று கருது கிறீர்கள்?’ என்றான். அவர் எம்பெருமான் தாமரைக் கண்ண்ான் உலகமாம் வைகுந்தந்தான் பேரின்பம்’ என்றார். -

அவன் ஒரு பகடிச் சிரிப்புடன், தம்மால் விரும்பப்படும் மனைவியின் மென்தோளில் சாய்ந்து துயில்வதைவிட, *தாமரைக் கண்ணான் உலகு இன்பமோ? அவ்வாறாயின் இருவரும் சேர்ந்து காண்போமே என்றான். தாமரைக் கண்ணன் உலகு என்ற அவன் குரலில் ஒரு பகடிகிண்டல் பொங்கியது:

“தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல்;

தாமரைக் கண்ணான் உலகு’’ (1103)

என்று அவனைப் பேச வைத்த திருவள்ளுவர் திருமாலை எப்பெருமையில் அமைத்துள்ளார்? கூர்ந்து நோக்குவார்க்கு அதில் உள்ள பகடி புரியும். இது காதல் கொப்பளிப்பில் இருந்த மணாளனின் உளறல்’ என்று கூறலாம்.

அடியளந்தான்

மற்றொன்றை இவ்வாறு ஒதுக்க முடியாது. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு (610) இக்குறளில் அடியளந்தான் திருமாலின் வாமனத் தோற்றரைவக் (அவதாரத்தைக்) குறிக்கும்.