பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 53.

என்று சிவனடியார்கள் பாடுவர். மார்க் கண்டேயன் வாழ்வின் எல்லையில் சிவ பகுத்தறிவு பெருமான் கருவறையில் போய் இலிங்கத் முனை தைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். உயிரைப் பறிக்க வந்த கூற்றுவன் கரு 7 வறைக்குள் போய்த் தொட்டிழுக்க அஞ்சி ஈர்ப்புக் கயிற்றை வீசினானாம். இதை மனத்தில் கொண்டு பாடப்பட்டது மேல் வரிகள்.

கூற்றுவன் தோற்றான்

ஆனால், அக்கதை அறிவை விலக்கி வைத்துக் கட்டப் பட்ட கதை.

'நோன்பு என்னும் தவ வல்லமையில் முனைந்தவரால் கூற்றுவனை வெல்லவும் முடியும்' என்று உலக நடை முறைக்குப் பொருந்துவதைத் திருவள்ளுவர், .

'கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு” (268)

என்றார். தவத்தின் ஆற்றலால் உயிரையும் நிலைநிறுத்திக் கொள்பவரைக்கண்டால் கூற்றுவன் குதித்து ஒடிப்போவான் என்னும் குறிப்புப் பொருளும் இக்குறளில் ஒலிக்கிறது. கூற்றுவனை வெற்றிகாண இராமலிங்க அடிகளாரும் ,சாகாக் கல்வி பயிலச் சொன்னார்.

கூற்றுவன் என்னும் சிறு கடவுளைத் துறவியிடம் தோல்வியுறுபவனாகக் காட்டியமை ஒரு பகுத்தறிவு முனை யாகும். - -

ஒர் அமைதி சொல்லப்படலாம். மன்னன், மடி யில்லாள், நோற்பவர் முதலியோரைப் பெருமைப்படுத்தவே