பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

இங்கு மெய்ப்பொருள் என்றது கடவுளைக் குறிப்ப தாகக் கொள்ள இயலாது. மெய்ப்பொருள் என்பதற்கு உண்மைக் கருத்து என்றே பொருள். இச்சொல்லைத் தொல்காப்பியர் ஒரிடத்திலும் திருவள்ளுவர் 5 இடங். களிலும் திரிகடுக ஆசிரியர் நல்லாதனார்” ஒரிடத்திலும் 'எண்மைக் கருத்து’ என்னும் பொருளில் கையாண்டுள்ளனர். கடவுள் என்ற பொருளில் இல்லை. பிற பழம் நூல்களில் இச்சொல் இல்லை. - r

திருவள்ளுவரும் ஐந்து இடங்களிலும், (249, 355, 356, 423, 857) (உண்மைக் கருத்து என்னும் பொருளிலேயே கையாண்டுள்ளார்.

எனவே, காலிங்கர் கருத்தும் கடவுளைக் குறிப்பது ஆகாது. 3. -

ஆனால், இடைக்காலத்திலிருந்து இன்று வரை காலங் காலமாக உலகத்தார் உண்டு என்பது கடவுள் உண்டு’ என்று கூறப்படுகிறது. ஒரு கருத்தைக் காலங்கால மாகவோ, அடிக்கடியோ, மேலும் மேலும் மேலுமோ கூறுவ தால் அக்கருத்து உறுதிபடைத்ததாகாது.

அவ்வாறு மீண்டும் மீண்டும் கூறுவதே அக்கருத்திற்கு மறுப்பும், கண்டனமும் அவ்வப்போது எழுந்தமையா லாகும். இதனால், இப்போதும் அப்பொய்க் கருத்தைத் தோலுரித்துக் காட்ட வேண்டியுள்ளது.

கடவுளை மறுத்தோ

நம் நினைவிற்கு எட்டும் காலம் முதல் கடவுள் மறுப்புக் கொள்கையர் பரவலாக இருந்தனர். குறிப்பாகப் பலரைச் சொல்லலாம். -

1. தொல்காப்பியர் : தொல். சொல் : 120 2. நல்லாதனார் : திரி ; 48.4