பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் - 57

கி. மு. மூன்றாம் நூற்றாண்டுக் காலப்புத்தர் 'கடவுள் இல்லை என்றார். அவரை வடபுலத்தார் நிரீசுவரவாதி (கடவுள் இல்லை என்று வாதிப்பவர்) என்றனர். அவரைப் பின்பற்றிய புலவர் பெருமக்கள் பலர் சங்ககாலத்தில் அக் கொள்கையுடன் வாழ்ந்தனர். புத்தர் முதலாக இவர் களையும் கூட்டிப் பேய்கள் என்பதற்காகத் திருவள்ளுவர் இக்குறளைப் பாடினாரா? அவர்கள் யாவரும் பேய்களா?

முற்காலச் சமணத்தில் கடவுள் உண்டு என்னும் கோட்பாடு இல்லை. பின்னர்தான் முளைத்தது. அவர்க ளெல்லாரும் பேய்களா? திருவள்ளுவர் அவ்வாறு கருதும் அல்லது சாடும் போக்கினரா?

மேலும் எழுதினால்,

சமண மூலத் தலைவர்கள் பஞ்சபரமேட்டிகள் எனப்படுவர் அன்னோர் வானத்தில் உருவின்றித் திரிபவர். தம் அடியார்களுக்கு அருள வந்திறங்கி அருள்வர்.

அதற்கெனச் சமணர் தாமரை வடிவக்கல்லாம் பீடங்: கள் ஐந்தை அமைத்து வைத்திருப்பர். உருவமற்ற அப்பர மேட்டிகள் அவற்றில் அமைவதாகக் கருதி வழிபடுவர்.

திருவள்ளுவர் முதல் அதிகாரத்தில் எட்டு குணங்களை உருவகமாக அடி, தாள்’ என்று காட்டியுள்ளமை கண் டோம். இதனால், திருவள்ளுவர் சமணக் கோட்பாட்டினர் என்பது கருத்தன்று. அவர் கூறிய தனிக்கருத்து நம்மால் ஒத்துப் பார்க்கப்படுகின்றது என்பதே உண்மை.

கான் றே .ே ய்களா ? .

உலகளாவிய அளவில் நோக்கினால் எத்துணையோ பெரு மக்கள், சான்றாண்மையர், அறிவுச் செம்மல்கள்,

لم - به . هي