பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

அடாவடிப் பேச்சேயாகும். அதற்குத் திருவள்ளுவர் இடம் வைக்கவில்லை. இக்குறள் கடவுள் மறுப்பாளர்க்குத் துணையாகும் ஒரு முனையாகும்.

காணாதவன் காட்டுவானா?

துணையாகும் மற்றொரு முனையும் உண்டு. இதே புல்லறிவாண்மை அதிகாரத்தில் இதற்கு முன்னுள்ள குறள்,

‘காணாதான் காட்டுவான் தான் காணான்

காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு' (849).

என்பது. இஃதும் புல்லறிவாளனைப் பற்றியதே. 'உலகத்தார் உண்டு என்பதற்குக் கடவுள் தொடர்பில் பொருள் கொண்டால் இக்குறளுக்கும் கடவுள் தொடர்பில் பொருள் காணவேண்டும். அவ்வாறு கண்டால்,

கடவுளைக் காணாத ஒருவன் கடவுளைக் காணாத மற்: றொருவனுக்குக் கடவுளைக் காட்டப் புகுவான். இதனால் முன்னவன் என்ன குழப்பம் பெறுவானோ அதே குழப் பத்தைப் (கடவுளைக் காணாதவன்) பெறுவான்? எனும் பொருள் வரும். இதனால் கடவுளைக் காண்பதாகச் சொல்வது வெறும் அளப்பு என்னும் கருத்தே கிடைக்கும்.

திருவள்ளுவர் கருத்துப் பேழையாம் திருக்குறளில் குறிப்பாகவும் நெறிப்பாடு தழுவியும் இடம் பெற்றுள்ள பகுத்தறிவின் அணுக்கமான கடவுட்கொள்கை காணப் பட்டது. இஃது இன்னுமொரு பகுத்தறிவு முனை. அடுத்த தொரு பகுத்தறிவுச் செம்முனை தெய்வம்பற்றியது