பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 61

தெய்வம்

'நிறைவாக வாழ்ந்த நிலமாந்தன் தெய்வம் ஆனான் என்று கண்டோம். தமிழ் இலக்கணப் பெருநூலான தொல்காப்பியம் தெய்வத்தை மாந்தருடன் இணைத்தே பேசிற்று.

"தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவி

உயர்திணை மருங்கில் பால்பிரிந்து இசைக்கும்" 1

'மால்வரை தெய்வம்............

உயர்திணை மேன’2

என தெய்வத்தை மாந்தரில் உயர்திணையாக அமைத்தது. நான்கும் ஒன்றுமாகப் பகுக்கப்பட்ட தமிழ் ஐந்து நிலத்திந் கும் தனித்தனியே கருப்பொருள்கள் உள்ளன. அவை 14. அவற்றைக் கூறும் இலக்கண நூற்பா,

'தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை' எனத் தெய்வத்தையும் ஒன்றாக வைத்தது. ஆனால், முதலில் வைத்தது. -

எனவே, தமிழ் மரபில் தெய்வம் என்பது மேம்பட்டுப் புகழுடம்பெய்திய மாந்தனே. அப்பட்டியலில் குறிஞ்சித் தெய்வம் முருகன், முல்லைத் தெய்வம் திருமால், மருதத் தெய்வம் இந்திரன், நெய்தல் தலைவன் வருணன், பாலைத் தெய்வம் கொற்றவை எனப்பட்டனர்.இன்னோர் மாந்தரில் நிறைந்து வாழ்ந்து புகழுடம்பில் நிலைத்தவர்களாவர்.

1 தொல்காப்பியர் : தொல், சொல் : 4-3

2 தொல்காப்பியர் : தொல், சொல் : 58-2 3 தொல்காப்பியர் : தொல், பொருள்,: 20-1