பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

ஆனால், வடவரால் கட்டப்பட்ட புராணங்களில் இத் தெய்வங்களுக்கு அளவிற்கு மீறிய வல்லமைகள் ஏற்றப் பட்டன. அறிவுக் கொவ்வாத அருளிப்பாடுகள் கூறப் பட்டன. அவை கவர்ச்சியூட்டும் கதையளப்புகள் கட்டப் பட்டன.

இச்சூழல் தொடங்கி இட்ம்பிடிக்கத் தொடங்கிய பல சூழலில் திருவள்ளுவர் தெய்வத்தை எந்த நோக்கில் மக்கள் முன் வைத்தார்? தணியொரு தன்மையிலோ ஒப்புயர்வற்ற தகுதியிலோ வைத்தாரா? தெய்வம்' என்பதை மாந்த னுடன் பொருத்தியபோது என்ன நிலை கொடுத்தார்? இவற்றின் விடைகள் திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனையை அடையாளங்காட்டுபவை.

திருவள்ளுவர் ஆறு குறட்பாக்களில் தெய்வத்தை எடுத்தாள்கின்றார். ஆறு மாந்தருடன் பொருத்தப்படும் இடங்களே.

நூலில் அமைந்த வரிசைப்படி நோக்காமல் கருத்து வரிசைப்படி எடுக்க நேர்கின்றது. இவ்வாறு எடுப்பது எடுத்த கருத்தை எளிமைப்படுத்தும்.

"மாந்தன் முயற்சி, உடல் வருந்தியேனும்

செய்யப்பட வேண்டும்; தக்க பயன்கிட்டும்.

தெய்வத்தால் ஆகாததையும் கிட்டச் செய்யும்' என்பதனைக் கூறும் குறள்,

'தெய்வத்தான் བཨཾ༔ ཆr தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்' (610)

என்பது. இதில் தெய்வத்தால் ஆகாததை மாந்தன்

முடிப்பான் என்றது, மாந்தனுக்கு அடுத்தபடியில் தெய்வத்தை வைக்கிறது.