பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் - 65

'செம்பொருள்' என்றால் கடவுள் என்று சிலர் பேசுவ துண்டு; எழுதினர். திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் இச்சொல்லை ஆண்டுள்ளார்.

'பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்ப தறிவு' (358)

'நான் அப்படிப் பிறப்பேன், இவ்வாறு பிறப்பேன்? என்று நம்புவது அறியாமை (பேதைமை); இது நீங்க வேண்டும். நீக்கி எவ்வளவு அறிவு கொள்ளவேண்டும்’ சான்றோர் ஆய்ந்து கூறியுள்ள செவ்விய உண்மைப் பொருளைக் கொள்வதே அறிவாகும்.

இதில் கடவுளுக்கு இடம் இல்லை.

மற்றுமோர் குறளாகிய

'இன்சொலால் ஈரம் அணைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்' (91)

என்பதிலும் சொல்லிய உண்மைப் பொருளே கூறப் பட்டுள்ளது. எனவே, செம்பொருள் என்பது

கடவுளாகாது.

இறைக் கோட்பாடு - வாழ் வியல் கோட்பாடு

திருவள்ளுவரைக் கடவுட் கொள்கை நோக்கில் அணுகி

னால் பின்வரும் முடிவுகள் நிறைவு பெறுகின்றன.

திருவள்ளுவப் பெருந்தகை இறை நம்பிக்கை உள்ளவர்.

அவர் காட்டும் இறை, பகுத்தறிவுப் பகவன்'. அது குணங்

களில் உருவகம், உருவ அமைப்பன்று. எனவே, கடவுள்' என்னும் உருவ உட்பொருள் கொண்டதை அவர் அறி