பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

வுறுத்தவில்லை. அவர் குறிக்கும் இறைப்பயன் வாழ்வின் அயன்களாகும். - -

வாழ்வின் பயன்கள் எவை?

திருவள்ளுவர் கருத்தின்படி

‘தூய அறிவைப் பெறல்; நிலமிசை நீடு வாழ்தல்; என்றும் எங்கும் துன்பம் இன்மை; இருவினை சேராமை (நீடு வாழ்தல்); மனக்கவலை மாற்றல்; அறம் அல்லாத வற்றைக் கடத்தல்; பொறிகளை அவற்றின் குணத்தில் நிறுத்தல்; பிறவி ஒரு கடல் என்றால் மேற்காணப்பட்ட பயன்களால் நீந்தி நிறைவு பெறுதல்.

எனவே, திருவள்ளுவரின் இறைக்கோட்பாடு வாழ்வியற் கோட்பாடாகும்.