பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சாதி ஒழிப்புக் கொள்கை

திருவள்ளுவரின் இறைக்கொள்கை காணப்பட்ட முன் பகுதியின் தலைப்பு கடவுட் கொள்கை' என்று குறிக்கப் பட்டது. அத்தொடரில் கடவுள்' என்னும் சொல் அதற் குள்ள உள்ளிட்டுப் பொருளில் அமைக்கப்படவில்லை. பொதுவில் மாந்தர்பால் வழங்கப்படும் பொதுக் குறியீட்டுச் சொல்லாகவே அமைக்கப்பட்டது. அதுபோன்றே இப் பகுதித் தலைப்பிலும் சாதி என்னும் சொல் அமைக்கப் பட்டுள்ளது.

சாதி

'ஜாதி என்னும் வடசொல்லின் தமிழ் எழுத்து உருவம் 'சாதி என்னும் சொல். அது வடமொழியில் நன்மை, சிறப்பு, தொகுப்பு என்னும் பொருள்களைத் தரும். அப் பொருளுடன் தான் தமிழில் அச்சொல் புகுத்தப்பட்டது. தொல்காப்பியரும்,

நீர்வாழ் சாதியும்' என்று இரு இடங்களில் கையாண் டார். உயிரினத் தொகுப்பு என்பதே இங்கு சாதி' என்ற. தன் பொருள். கடியலூர் உருத்திரங்கண்ணனாரும்,'

1 தொல்காப்பியர்: தொல். பொருள்: 583,608 - 2 கடியலூர் உருத்திரங்கண்ணனார்: பெருபாண்: 229