பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-68 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

'கடுப்புடைப் பறவைச் (கொட்டும் குளவி) சாதி' என்று பறவை இனத்தைப் பாடினார்.

மாந்தருள் பிறப்பால் பிரிவினைப் படுத்தியவர் வட மொழி ஆரியரேயாவர். வடமொழிப் பேராசான் இராகுல சாங்கிருத்தியாயனும்

'இந்த வசிட்டரும் விசுவாமித்திரரும் வந்துதான் சாதி வேற்றுமையைத் தொடங்கி வைத்தார்கள்'

என்று ஆராய்ந்து கண்டு எழுதினார். அவ்வேற்றுமையைத் தமிழ் மண்ணிலும் புகுத்தினர். அதற்கு முன் தமிழர் பிறப்பால் உயர்வு தாழ்வின்றியே வாழ்ந்தனர். இப்பிறப்புப் பிரிவை வடமொழியில் வருணம் (நால்வருணம்) என்றனர். இச்சொல்லும் சாதி என்னும் சொல்லும் இப்பொருளில் சங்க இலக்கியங்களில் இல்லை.

உயிரினப் பிரிவு என்று பொதுப்பொருட் சொல்லாகிய ,சாதி என்பதையே வருணம்’ என்னும் கருத்தில் கையாண்டனர்.

நால்வகை வேறுபாடு

வடவர் பிறப்பால் நால்வகை வேறுபாட்டைத் தமிழ் மண்ணில் புகுத்தி நிலைக்கவும் செய்தனர். அது, தாம் உயர்ந்தவர் என்றமைத்துக் கொள்ளச் செய்ததாகும். அது தமிழ் மண்ணில் பதிந்துவிட்டது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்விச் சிறப்பைப் பாடினான். அப்பாட்டு, -

1 இராகுல சாங்கிருத்தியாயன்: வால். கங்கா: பக்கம் 227 தமிழ் மண்ணில் பதிந்துவிட்டது.