பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 69.

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே".

என்பது. இதில் பிறப்பால் வேறுபாட்டைக் குறிக்க பால்: என்னும் ஒரு பொதுச் சொல்லைக் கையாண்டார். பால்’ என்பதற்குச் சாதி என்னும் பொருள் இல்லை. மன்னன்' வேற்றுமை தெரிந்த' என்று உடல் நிறத்தால் (வருணத்தால்) மொழிய ல், உடையால், பழக்க வழக்கங்களால்வேற்றுமை தெரியக்கூடியவன் என்றார். அவருக்குள் கீழான பிரிவினர் (சாதியினர்) மேலான பிரி, வினர் (சாதியினர்) என்ற உயர்வு தாழ்வையும் குறித்தார். எனவே, அவர் காலத்தில் பிறப்பால் உயர்வு தாழ்வு. மண்ணில் பதிந்திருந்ததை அறிகிறோம். இச்சூழலில்தான் திருவள்ளுவர் இக்கருத்தை அணுகினார்.

அவரும் கல்விச் சிறப்பை அப்பாண்டிய மன்னன் பாங்கிலேயே குறித்தார்.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார்; கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு” (409)

என்றும், பெருமை சிறுமை நிலையில்,

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்: கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்' (973).

என்றும் பாடினார்.

இவ்வாறு மேற் பிறந்தார், கீழ்ப்பிறந்தார், மேலிருந்: தும், கீழிருந்தும்' என்று நாட்டிலிருந்த பிறப்பின் பிரிவைச்

| ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்: புறம் 183-8-10.