பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 71.

மேலும்,

அவனவன் அவனவனுக்கு உரிய அல்லது உகந்த தொழிலைச் செய்வான். அவ்வாறு செய்யும் தொழில் காரணமாகச் சிறப்பு சொல்வது ஒவ்வாதது என்று உயர்வு தாழ்வுக் கருத்தைச் சாடினார். -

இக்குறள் பாண்டியன் பாடலுக்கு மட்டும் மாற்றுக் கருத்தன்று. கடுவன் இளவெயினனார் பாடிய பின்வரும். பாடலுக்கு நேர்முக மறுப்பும் ஆகும்.

" சிறப்பினில் உயர்வாகலும் பிறப்பினில் இழிபாகலும்'

'முன் செய்த நல்விணையின் சிறப்பால் உயர்ந்த குலத்தவர் ஆதல்; தீவினையினால் தாழ்ந்த பிறவியர் ஆதல் உண்டு: என்கின்றன இவ்வடிகள். முருகன் தன்னையன்றிப் பிறரை இவ்வாறு அமைத்தானாம். தமிழ்க் கடவுளாம் முருகனே குலத்தில் உயர்வையும், இழிவையும் தரும் வல்லமையுள்ளவன் என்றார். - - - - - - -

இக்கருத்தைத் தகர்த்துப் பொடியாக்குவது போன்று திருவள்ளுவர், • * : . . . . ." o

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார். மேலும் நொறுக்கித் தூளாக்குவது போன்று,

‘சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்'

என்றார்.

கடுவன் இளவெயினனார்: பரி: 5-19,20