பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

இவ்வொரு குறள் தமிழ் மண்ணில் தொன்மைத் தமிழ். மக்கள் தகவை முத்திரையாக்கும் குறளாகும். அத்துடன் அவர் பதித்த சாதி பற்றிய பகுத்தறிவு முத்திரையுமாகும்.

ஆனால், சாதிக்குரிய எச்சொல்லையும் கையாளாத, திருவள்ளுவர் ஆரிய இனத்தவருக்குரிய பார்ப்பான்’ என்னும் சாதிப் பெயரைக் கையாண்டு பார்ப்பான் பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்' என்று ஏன் எழுதினார்? இவ்வினா ஒரு பெருங்கருத்தை வெளிப்படுத்த உதவும் வினா. -

மனுவின் விதிப்பு

திருவள்ளுவர் காலச் சூழலில், வடவர் தமிழ் மண்ணில் பதித்த கருத்துக்கள் பல. அவற்றில் ஒன்று என்று மட்டும் குறிக்க முடியாமல்-வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் தம் இனத்தை உயர்த்த ஆழமாகப்பதித்த கருத்து நோக்கத் தக்கது. அச்சூழலில் மனு கருத்துக்கள் மிகப் பரவலாகவும், ஆழமாகவும் தமிழரிடையே மதிப்பைப்பெறும் அளவிலும் பரப்பப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று,

"தம் குல ஒழுக்கமற்ற பிராமணன் கூட

மன்னனுக்குள்ள இடத்திலிருந்து நீதி (அறம்) உரைக்கலாம்'

என்பது. (இதனைத் தொடர்ந்து எழுதப்பட்டுள்ள கருத்தைப் பின் காண வேண்டும்.)

மனுசுமிருதிக் கருத்துக்கள் தமிழரிடையே நம்பத் தகுந்த அளவு பதிய வைக்கப்பட்டிருந்தன. இதனை உணர்ந்த திருவள்ளுவர் இது ஒழுக்கத்திற்கு மாறுபட்ட கருத்து எனக் கொண்டார். "ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்’ (131) என்ற கருத்துடையவர் திருவள்ளுவர்.