பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் . 73.

அதனால் பார்ப்பனர் ஒழுக்கக்கேட்டை ஏற்கும் மனுவின் கருத்து தமிழினத்திற்கு மட்டுமன்று, மக்களினத்திற்கே கேடு பயப்பது. அதனால் திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை’ அதிகாரத்தில் 'பிராமணனின்...... பார்ப்பானெனின் ஒழுக்கக்கேடும் கெடுதி தருவதே' என்பதை அறிவுறுத்தவே மேற் காணப்பட்ட குறளை எழுதினார். குறிப்பாகப் போர்ப்பான்’ எனும் சொல்லையும் பயன்படுத்தினார் என லாம். இக்குறளில்,

'பார்ப்பான் (பிராமணன்) தன் குல

ஒழுக்கம் குன்றினால் அவன் தகுதி கெடும்’- .

என்றார் ஒழுக்கங்கெட்டதால் தகுதியற்றவன் அறம் உரைக்கத் தகுதி உடையவன் அல்லன்' என்பதையும் குறிப் பாகக் கொள்ள வைத்தார். இக்கருத்து மனுசுமிருதி விதித்ததை விலக்குவது. இவ்வாறிருந்தும் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் என்ன எழுதினார்?

மனு வழி லன் ருவமா?

பரிமேலழகர் திருக்குறள் உரைத் துவக்கத்தில் உரைப்பாயிரம் என்று அறததை விளக்கி எழுதினார். அதில் 'அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்' என்றார். மனுசுமிருதி பார்ப்பனன் ஒழுக்கம் கெட்டாலும் அறம் சொல்லலாம்’ என்கின்றது. திருவள்ளுவரோ அதற்கு மாறாக ஒழுக்கங்கெட்டவன் பார்ப்பனனே ஆனாலும் அறத்தகுதி உடையவன் அல்லன்' என்றார். திருவள்ளுவர் கூறிய இது மனு முதலிய நூல்களில் விதித்தன சொல்லுதலா? விலக்குதலா?

தி ப-5