பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 75

சாதி வேற்றுமைக்குள்ளும் ஒழுக்க வேற்றுமை காட்டும் கருத்து உலவவிடப் பகுத்தறிவு பட்டுள்ள சூழலை அறிந்துதான் பொது முனை வாக அனைத்து மக்கட்கும் ஒழுக்கத்தை r வலியுறுத்தும் திருவள்ளுவர் குறிப்பாக, 11 தவறக்கூடாது; தவறினால் தகுதி கெட்ட வன்; தகுதியற்றவன் என்றார்.

இக்குறளால் மற்றொரு வகையிலும் பார்ப்பனர்க்கு ஒழுக்கத்தை வலியுறுத்தினார். ஒத்து’ என்றால் வட மொழி நான்மறை...... வேதம். நான்மறையை ஒதுவது பார்ப்பனரின் குலக்கடமை. ஓதுவது மட்டுமன்று ஒதியதை மறக்காமலிருப்பதும் கடமை என்று வேதம் விதிக்கிறது. மறந்தவர்களும் தமிழ் மண்ணில் உலவியிருக்கவேண்டும். அன்னாரை நினைவுகூர்ந்த திருவள்ளுவர், -

மறப்பினும் ஒத்துக் கொளலாகும்" என்றார். மறந் தாலும் மீண்டும் கற்று ஒதலாம். ஆனால், மறக்கவும் கூடாத கடமை “ஒழுக்கம் தவறாமை’ என்று வலி யுறுத்தினார். :

எனவே,

'மறப்பினும் ஒத்துக் கொளலாகும்; பார்ப்பான் - பிறபொழுக்கம் குன்றக் கெடும்" - (972)

என்னும் குறள் மனுவை மறுத்து எழுதப்பட்டதாகும். 'ஒழுக்கம் உடைமை குடிமை என்று ஒழுக்கத்தால் மக்கள் அனைவரையும் பொதுமைப்படுத்தும் கருத்துடைய குறள் இது. ஒழுக்கத்தின் மூலம் சாதி உயர்வு வாழ்வை ஒதுக்கித் தள்ளும் குறள். இதனால் இக்குறள் பகுத்தறிவு முனையாக வம் அமைகின்றது. - . .*