பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 77

போன்று தொல்காப்பியத்தில் உள்ளது. அஃது அப்பட்ட மாக அந்தணரைப் பார்ப்பனராக அடையாளங் கூறுகிறது.

'நூலே, கரகம், முக்கோல், மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய'

என்னும் நூற்பா பூணுரல், மந்திர வழிபாட்டின்போது வழி படும் நீர்கொண்ட கெண்டி, மும்முனைத் தடி, அமரும் பலகை என நான்கும் அந்தணர்க்குரிய அடையாளங்கள் என்கின்றது. பொதுவாக இவை நான்கில் பின் மூன்று துறவிகளுக்கு உரியனவாயினும் ஆயுங்காலை என்றதனால் இவை மூலத்தில் பார்ப்பனருக்குரிய அடையாளம் என்றா கின்றது. மற்றும் இந்த நூற்பாவை அடுத்துத் தொடர்ந்து வரும் 15 நூற்பாக்களில் முறையே அரசர் சின்னங்கள், கடமைகள், வணிகர் கடமைகள், வேளாளர் கடமைகள் குறிக்கப்பட்டுள்ளன. எனவே நால்வரின் சாதி பற்றிய குறிப்புகளே இவையாகின்றன. எனவே பூணுரல் முதலாகக் கொள்ளும் பார்ப்பனரை அந்தணர் என்றே தொல் காப்பியம் காட்டுகிறதா?

தொல்காப்பிய இடைச்செருகல்

இந்நூற்பாக்கள் கொண்டு பார்ப்பனரை அந்தணர் என்றும், அந்தணர் சாதிப்பெயர் என்றும் கொள்ள முடி யாது. ஏனெனில், இப்பதினைந்து நூற்பாக்களும் வேண்டு மென்றே பார்ப்பனப் புலவரால் ஆக்கப்பெற்று இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டவை.

நம் கருத்துக்கு ஒத்து வராத காரணத்தால் இடைச் செருகல் என்று தள்ளிவிடுவதா? இவ்வாறு வினவுதல்

1. தொல்காப்பியர் : தொல்-பொருள்: 613.