பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் 79

منٹ ہوئے۔

'வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை'

என்பது. அஃதாவது மூன்றாம் சாதியானாகிய வாணிகன் வைசிகன்’ என்று வடசொல்லால் குறிக்கப்படுகிறான். இவ்வடசொல் அக்காலத்தில் புகுத்தப்படாதது. சங்க நூல்களிலும் இல்லை; அவற்றிற்குப் பிற்பட்ட சிலப்பதி காரத்திலும் இல்லை. சிலப்பதிகாரம் எவர் குடும்' வரலாற்றைக் கூறுவது? வாணிக இனத்துக் கண்ணகி கோவலன் வரலாற்றைக் கூறுவது அன்றோ? வாணிகக் குடும்ப வரலாற்றை வடித்த சிலப்பதிகாரத்தில் இல்லாத வடசொல் அக்காப்பியத்திற்கு 1500 ஆண்டுகள் முற்பட்ட தொல்காப்பியத்தில் எவ்வாறு வந்தது? (சிலம்பில் வேறு பல வட சொற்கள் உள்ளன.)

விடை :

தமிழ் இலக்கணப் பெருநூலில் சாதி வேற்றுமையைப் பதிந்துவிட வேண்டும்; அதை வைத்துத் தமிழர்களை நம்ப வைக்கலாம் என்ற முனைப்புடையோர் எழுதிச் சேர்த் தனர். இச்சேர்ப்பில் பார்ப்பனர் உயர்ந்தவர்' என்பதை யும், அவர்தாம் அந்தணர் என்பதையும் கள்ள வழியில் பதிவாக்கினர். இது இடைவெட்டுச் செயலாகும். எனவே, இப்பதினெட்டு நூற்பாக்களும் இடைச் செருகல்களே என் பதில் ஐயமில்லை. , - .

இவை கொண்டுபார்ப்பனர் என்போர் அந்தணர் என்று கொள்ள முடியாது. -

1. தொல்காப்பியர் தொ. பொருள் : 622