பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 81

மதுரை தீப்பிடித்ததும் பலவகையினரும் நகரைவிட்டு நீங்கினர். சிறு தெய்வங்களாம் பூதங்களும் நீங்கின. அவற்றவற்றின் தலைமைப் பூதங்களும் நீங்கின. பூதங் களுள்ளும் நான்கு சாதிகள் கூறப்பட்டன. இதனை இளங்கோவடிகள் ஏற்றவராக எழுதியுள்ளார். ஆனால், இளங்கோவடிகள் பொதுவாகவும் ஓரளவு குறிப்பாகவும் ஒவ்வொரு பூதத் தெய்வத்தை வர்ணித்துள்ளார். பார்ப் பனப்பூதக் கடவுளை வர்ணிக்கும் பகுதி உள்ளது. அவற் றிடையே அமைந்ததுதான் மேலே கண்ட மூன்று அடிகள்.

சிலப்பதிகாரக் காப்பியப் பதிப்பை எடுத்து நோக்குவீர் களானால் அழற்படுகாதையில் மட்டும் ஆங்காங்கே பல அடிகள் (......... 1 குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கும். இதற்கு அடிக்குறிப்பு எழுதிய பதிப்பரசர் உ.வே. சா. அவர்கள்,

“[......... 1 இந்த அடையாளத்துக்கு உட்பட்ட பகுதி கள் சில பிரதிகளில் இல்லை’ என்று காட்டியுள்ளார்.

மேலே கண்ட மூன்று அடிகளும் இக்குறிகளுக்குள் உள்ளவை. அஃதாவது சில (பிரதிகளில்) ஒலைச்சுவடிப் படிகளில் இல்லாதவை; இதற்கு என்ன பொருள்? இவை இல்லாத ஒலைச்சுவடிகள் தொன்மையானவை. குறி களுக்குள் உள்ளவை இடையே பின்னர் செருகப்பட்டவை என்பதுதானே?

இவ்விடைச் செருகல் தொல்காப்பியத்தின் இடைச் செருகலை வழிமொழிவதுடன் பார்ப்பன அழுத்தத்தையும் காட்டுவதாகும். இதனைக் காட்டவே சிலம்புச் செய்தி குறிக்கப்பட்டது. - ---