பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

எனவே, தொல்காப்பியத்து இடைச்செருகலை நீக்கித் தான் நோக்கவேண்டும். இந்நோக்கில் அந்தணர் பார்ப்பனராகார், -

ஆனால், தொடர்ந்து உருப்பெற்ற இலக்கியங்களில் 'அந்தணர் பற்றி நோக்கவேண்டியுள்ளது. 'அந்தணர் வேள்வி ஒர்க்கும்' . 'அந்தணர் வேதம் பாட' " “அருமறை நாவின் அந்தணர்' " 'ஒத்துடை அந்தணர்' " 'அழல் புறந்தரூஉம் அந்தணர்' " 'அந்தணர்க்கு ஒத்துடைமை ஆற்றமிக இனிது இவை போன்று மேலும் உள்ளவை பார்ப்பனரை அந்தணர் என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது என்பதை மறுத்தற்கில்லை.

மற்றொரு நோக்கில்,

  • † 6

துறவு அந்தணர்

'எரித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைகீழல்

உறித்தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும் நெறிப்பட அவலசை இவேறு ஓரா கெஞ்சத்துக் குறிப்பேவல் செயல் மாலை கொனைகடை

அந்தணிர்'

1. நக்கீரர் : முருகு ; 96 2. மாங்குடி மருதனார் : மது.கா : 656 3. நல்லூர் நத்தத்தனார் : சிறுபாண் : 204 4. மருதன் இளநாகனார் : கவி : 69-5 5. கபிலர் : புறம் : 122-3 6. பூதஞ்சேந்தனார் : இனிய : 7-1 7. -

பாலை பாடிய பெருங்கடுங்கோ : கலி : 9-2-4