பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:84 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

இவ்வாறு பள்ளி என்றிருந்தும் சமண, பெளத்த இருப் பிடம் என்று எழுதாமல் பார்ப்பனர் குறிப்பில் எழுதியமை நச்சினார்க்கினியரைப் பற்றி நீனைக்க வைக்கின்றது.

நச்சினார்க்கினியரின் நச்சு

அவர் பாரத்துவாச கோத்திரத்துப் பார்ப்பனர். அவர் அந்தணர் என்பதைப் பார்ப்பனர்' என்று காட்டும் முனைப்புடையவர். அதனை வலிந்து பையப்பையக் கருத்தைக் கூட்டியும் காட்டியவர் என்பதை அறிய முடிகிறது. -

'அந்தணர் என்னும் சொல் அம்--தண்+அர் என்பதன் கூட்டு என்று கண்டோம். பொருளும் கண்டோம். ஆனால், நச்சினார்க்கினியர்,

'அந்தத்தை அணவுவார் அந்தணர்' என்று புதுப் பொருளைப் படைத்து மொழிந்தார். இப்பொருளைப் படைக்க நச்சர் அச்சொல்லை அந்தம் + அணவுவர் என இரண்டு சொற்களாகப் பிரித்தார். இவ்விரு சொற்களும் தமிழ் இலக்கணப்படி கூடினால் அந்தமணவுவர் என்றாகும். மேலும் ஒரு புணர்ச்சி இலக்கணத்தால் ('ம்' போய்) "அந்தவணவுவர் என்றாகும் இது மேலும் தொகுத்தல் விகாரம் என்னும் இலக்கணத்தால் ('ம்' போய்) "அந்தணவுவர் என்றாகலாம். அதற்கு மேலும் வலிந்து கொள்ளும் ஒரெழுத்து கெடுவதால் அந்தணவர்' என்றாகி மேலும் தொகுத்தல் விகாரத்தால் அந்தணர் என்று ஆகவேண்டும். இரண்டு சொற்கள் குறுகி கூனி,நெளிந்து, வளைந்து, கெட்டு அந்தணர் என்று உருப்பெற்றதாகக் கொள்வது வலிந்து கொள்வது மட்டுமன்று; வேண்டு மென்றே ஒர் உள்நோக்கத்துடன் செய்யப்படுவதுமாகும். அம்+தண்+அர் என்பன அந்தணர் ஆவது இயல்பு;