பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s6 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

நம்மை எப்படி அங்கு அழைத்துச் செல்கிறார் என்பது புலனாகும். - . x

1. அந்தத்தை அணவுவார் அந்தணர், என்றது

வேதாந்தத்தையே நோக்குவார்' - ...

-திருமுருகு-96 உரை

இதில் பொதுவாக உள்ள அந்தத்தை, வேதத்தின் அந்தமாகக் கற்பித்துக் கொண்டார் என்பது நோக்கத் தக்கது. அதனையே சற்று விரிவாக, -

2. அந்தணர் வேதாந்தத்தை எக்காலமும்

பார்ப்பார்’ . - --மது 474 உரை. இதில் முன்னே நோக்குவார் என்றதை பார்ப்பார்

என்றமையும் கூர்ந்து நோக்க வைக்கிறது. இதற்கு மேலும், சற்று விரிவாக, - -

3. அந்தத்தை அணவுவார்; அந்தணர் என்றது

- வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பார்’

-கலி, கடவுள்வாழ்த்து-3 உரை

இதில் வேதாந்தத்தையே என்றார். பார்ப்பார்’ என்பதை மேலும் அழுத்தமாக்கினார். மேற்கொண்டு’ என்னும் சொல்லையும் சேர்த்துக் கொண்டார். இச்சேர்ப்பு ஏன்(?) என்று நோக்கினால் அணவுதல் மேல்நோக்குதல் என்பதன் பொருட்குறிப்பைக் காட்டித் தன்நோக்கத்திற்கு வலிமை சேர்ப்பதாகிறது. . . -

அம்+தண்+அர் என்னும்இயல்பை அந்தம்+அணவு+அர் என்று வலிந்து ஆக்கினார். அந்தத்தை வ்ேதாந்தம்