பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் ** 87

என்றார். வேதாந்தமே என்று பிற தமிழ்நூல்களை நீக்கினார். அணவுவார்' என்பதை நோக்குவார் என்றார். நோக்குவார்' என்றதைத் தாமே 'பார்ப்பார் ஆக்கினார். மீண்டும் பார்ப்பார்’ என்று வலியுறுத்தினார். அணவுதல் மேல்நோக்கல் என்பதைக் காட்ட மேற்கொண்டு” என்றார்.

இவற்றால் அந்தணர் என்பார் பார்ப்பனரே என்று பதிந்தார். இவ்வாறு பையப்பையச் சேர்த்தும், புகுத்தியும் செய்த நச்சரின் உள்நோக்கத்தை உறுதிசெய்ய அவர் பாரத்துவாச கோத்திரத்துப் பார்ப்பனர்" என்று நம்மை நினைக்கத் துரண்டுகிறது. நச்சர் நச்சராகிறார்.

கடவுளர் பார்ப்பனரா?

இடைக்காலத்தில் இவ்வாறு இவர் செய்யினும் சங்க கால வட்டத்து நூல்கள் கடவுளரை அந்தணர் என்றன.

'இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடைஅந்தணன்' என்று கலித்தொகை சிவனை அந்தணன்' என்றது.

பூணு லணிந்த -

"நுண்ஞாண் மார்பின்......... யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்’’’

என்று அகநானூறு சிவனைப்போற்றியது; பூனூல் காட்டிப் போற்றியது. .

1. கபிலர் : கலி : 38-1

2. பாரதம் பாடிய . -

பெருந்தேவனார் : அகம் : 1-15