பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 O திருவள்ளுவர் மேன்பாட்டுக்கும் தாந்தே"யின் மாபெரு நூல் எவ்வளவு இன்றியமையாததும் பெருமையளிப்பதுமாகுமோ, அவ்வள விற்குத் தமிழ்மொழிக்கு அது (குறள்) இன்றியமையாததும் பெருமையளிப்பதுமாகும் என்று கூறுவது மிகையாகாது. - சார்லஸ் ஈ. கவர் வள்ளுவர் குருமாரைக் கண்டித்து ஒன்றுமே கூறவில்லை என்று திரு. கவர் கூறியதில் உண்மையிருக்கலாம். அவர் குருமாருக்கு எதிரிடையாக ஒன்றுங் கூறவில்லைதான்; ஆனல், அத்தகைய ஒரு நூலில் ஒன்றுமே கூருதிருந்தது குறிப்பிடத் தக்கதன்ருே? பார்ப்பனர்கள் எல்லோமே குருமார் கள் அல்லர், குருமார்களை ஆதரிப்பவர்களும், வேலைக்கு அமர்த்திக் கொள்வோருமே ஆவர். பார்ப்பனர்களுக்கு அந்தணர் என்பது ஒரு சிறப்புப்பெயர் அவர்கள் அப்பெயரால் அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவரல்லர் என்று ஆசிரி யர் குத்தலாக மொழிகிருர். அழகும், தண்மையும் ஐந்தவித்த பற்றற்ற பெரியார்க்கே உரிய பண்புகளாகும். - 'அந்தண ரென்போ ரறவோர்மற் றெவவுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்.' சமயப்போலி, வஞ்சமனத்தான் படிற்றெழுக்கம், சமயக் கொடுமை ஆகியவை நூல் முழுவதிலுங் கண்டிக்கப்பட்டுள் ளன. பார்ப்பனர்களுடைய தெய்வங்களை வஞ்சப் புகழ்ச்சி யாகச் சுட்டிக் கூறியுள்ளார் என்றே சொல்லலாம். - ரெவரெண்டு ஈ. ஜே. ராபின்சன் பறையரென்று கருதப்பட்டவராயினும் திருவள்ளுவர் தெய்வத்தன்மை வாய்ந்த புலவர் பெருமாளுகவே மதிக்கப் பட்டுவந்தார். தமிழ் நூல்களில் மிகவும் சிறந்த நூல்களாக எல்லோ ராலும் கருதப்பட்டு வருகிற குறளும், சிந்தாமணியும் வட