பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 2.1 மொழித் தொடர்பு சிறிதுமில்லாமல் அமைப்பிலும், யாப்பிலும் தனிச் சிறப்பு வாய்ந்துள்ளன. - ரைட் ரெவரெண்டு ராபர்ட் கால்ட்வெல் டி. டி., எல். எல். டி. தமிழ் நூல்களில் தலை சிறந்து விளங்குவது திருக் குறளே. உயர்வுடனும் தூய்மையுடனும் உள்ளக்கருத்துக்களை எடுத்து விளக்கிய நூல்களில் அதுவும் ஒன்ருகும். திருக்குறளாசிரியர் வகுப்புக்களையும், மக்கட்பிரிவுகளை யும், கம்பிக்கைகளையும் பொருட்படுத்தாமல் மக்கட்குழு விற்கே உரியவகையில் எழுதிச் செல்கிருர், ஆன்ற நல் லொழுக்கத்தையும், கலப்பற்ற நீதியையுமே வகுத்துச் செல் கிருர், வாய்மையும் அறமும் அறங்களிற் றலை சிறந்தன என்று பறை சாற்றுகிருர், இல்லற வாழ்க்கைக்கும் குடியியல் வாழ்க்கைக்குமுரிய உயர்ந்த ஒழுக்க முறைகளை ஒன்று படுத்தி விதித்துச் செல்கிருர்; உயர்ந்த கருத்துக்களை எண்ணு வதிலும், அவற்றைச் சீரிய முறையில் எழுதுவதிலும், வியக்கத்தக்க வகையில் எழுதியவற்றைச் செய்யுண்முறை யில் அமைப்பதிலும், தெய்வத்தன்மை வாய்ந்த இயற்கை அன்னையின் இயம்பொளு எழில் கலங்களைத் துாய மனத் துடன் உன்னி உன்னி உளங்கொள்வதிலும், அகத்தெழும் இன்ப நிகழ்ச்சி நுணுக்கங்களை மிக எளிதான முறையில் ஆய்ந்தோதிச் செல்வதிலும் எத்தகைய குறைவுமில்லா நிறை வாற்றல் படைத்தவராய் இலகுகிருர், - எம். ஏரியல் இந்நூல் (திருக்குறள்) பயக்கும் இன்பம் எத்தகையது என்று எம்மொழிபெயர்ப்பும் எடுத்துக்காட்ட முடியாது. உண்மையைக் கூறுமிட்த்து, வெள்ளிச் சரிகைப் பையிலிட்ட பொன் இலங்தை (ஆப்பிள்) க்கனியாகும் அது. - டாக்டர் கிரெளல்