பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 2 3 தமிழ் யாப்பில் அமைந்துள்ள தொடை நயங்களின் அழகுகள் புரொப்பர்ஷியஸ்' என்பாரின் செய்யுணலங்களை நினைவூட்டுகின்றன. - ரெவரெண்டு ஜி. யூ. போப். மிகவுங் தூய்மையானவும், உயர்வையளிக்க வல்லனவும், சமயச் சார்பானவையுமான மனவெழுச்சிகளுக்கு விளைநில மாயுள்ள தமிழ் மொழியில் தொகுக்கப்பட்டுள்ள செய்யுள் நூல்களில் குறள் மிகவும் புகழத் தக்க தொரு தொகை நூலாகும். பகவத் கீதையில் சொல்லப்பட்ட நீதித் தததுவத்திற்கு ஒத்தனவாகவே குறளாசிரியர் ஒதும் தத்துவங்களும் காணப் படுகின்றன. - டாக்டர். பார்த் இந்திய மக்களின் மனத்திற் குடி கொண்டுள்ள இரண்டு நூல்கள் இந்தியாவிலுள. அவை வட இந்தியப் பகுதியிலுள்ள குரிசில் முதல் குடிமகனிருகவுள்ள ஒவ்வொரு வரும் அறிந்த துளசிதாசரின் இராமாயணமும், அதைப் போன்றே தென்னிந்தியப் பகுதி முழுவதிலும் உள்ளோர் நன்கறிந்த திருவள்ளுவர் திருக்குறளுமாம். இவ்விரண்டு நூல்களும் கலப்பற்ற தூய்மை வாய்ந்தன என்பது இரு நூலாசிரியர்கட்கும் பெருமை அளிப்பதாகும். இவையிரண்டில் குறளே காலத்தால் மிகவும் முந்தியதாம் ... H = H H = H H H = தமிழிலக்கியத்தின் தலையணியாகிய இதை (திருக்குறளை) ஓதியுணர்ந்தாலல்லது தமிழறிந்தவன் என்று எவனும் கூறிக் கொள்ள முடியாது என்பதில் சிறிதும் ஐயமின்று. - பிரடெரிக் பின்காட்