பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருவள்ளுவர் உயர்ந்த கருத்துக்களும், தூய்மையான ஒழுக்க விதி களும், தூய்மையாக கினைப்பதும் எழுதுவதும் இயற்கையில் காணக்கூடியனவே என்றும் உண்மையினைத் தெரிவிக்க வல்லதா யிருப்பதால் (குறள்) ஆர்வத்துடன் ஒதப்படும். இந்நூலாசிரியர் தாங் கூற வந்த நீதியுரைகளை அழுத்தம் திருத்தமாகச் செய்யுணடையிற் கூறுவதை யொப்ப உள்ள மற்ருெரு நூலே மக்களாய்ப் பிறந்தோர் பேசும் வேறெம் மொழியிலும் காணல் முடியாது. * ரெவரெண்டு பர்சிவல் ( உலகில் உள்ள மக்கள் பேசும் மொழிகள் சுமார் 999 - ஆசிரியர்.) வாழ்க்கையின் முப் பேரிலக்குகளான அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையுங் குறித்து ஆக்கப்பட்ட ஆயிரத்து முன்னுாற்று முப்பது குறுஞ் செய்யுட் டொடர்களைக் கொண்ட திருவள்ளுவரின் திருக்குறள் உலக இலக்கியங் களிலேயே பொறுக்கி யெடுத்த மணிகளில் ஒன்ருகும். புத்தர்களும், சமணர்களும், வைணவர்களும், சைவர் களும் பறையர் வகுப்பைச் சேர்ந்த புலவரான அம்முனி வரைத் தத்தம் மதத்தைச் சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடுகின்றனர். அவர் (வள்ளுவர்) அவற்றில் எம் மதத்தையும் சேர்ந்தவரல்லர். ஆல்ை, எல்லாவற்றிற்கும் அவர் ஒருங்கே உரியவர் என்றே கூறலாம். சாதி, வகுப்பு, மதம் என்ற எல்லாப் பிரிவினைகளையும் அவர் கடந்துகிற்கிருர், அவர் கூற்றுக்களோ, மக்கட் குழுவிற்கே பொதுவாய் உரியவான நீதியும் அறிவுரையுமே ஆகும். எனவே, பல 'நூற்ருண்டுகளாகத் திருக்குறள், தான் பிறந்த நாட்டிலே பரந்துபடக் கற்கப்பட்டுக் கருந்தனமாக மதிக்கப்பட்டு வருவதுடன் பல மேல்நாட்டு அறிஞர்களாலும் புகழ்ந்து கொண்டாடப்பட்டு வந்துளதென்பதில் வியப்பொன்றும் Θεύ8ου.