பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 25 ஏறக்குறைய 1730 - ஆம் ஆண்டளவிலேயே அதன் முதலிரு பால்களும் சி. ஜோஸப் பெஸ்கி பாதிரியாரால் இலத்தின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலமாகியவற்றில் மொழிபெயர்ப்புக்கள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்ருய் வெளிவந்தன. 1803 - ஆம் ஆண்டில் காமொர்' என்பவரால் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. ஆயினும், 1856 - ல் வெளிவந்த கார்ல் கிரெளல் என்பாரின் ஜெர்மன் மொழி பெயர்ப்பே சிறந்ததாகும். ஜெர்மன் புலவரும் தேர்ந்த மொழிபெயர்ப்பாசிரியருமான பிரெடரிக் ரூக்கர்ட்' என்பவ ரால் சில குறள்கள் 1847 - ல் மொழிபெயர்க்கப்பட்டன. யானறிந்த வரையில் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ஜி. யூ. போப் அவர்களின் மொழிபெயர்ப்பே மிகவுஞ் சிறந்ததாகும். திரு. போப் அவர்கள் தமிழ்வல்லவர் என்பதுமட்டு மன்று; பல ஆண்டுகள் தமிழ் மக்களிடையே வாழ்ந்து வந்தவராதலால், அவர்கள் மாட்டு உண்மையன்புடையவர். திருவள்ளுவ முனிவரை மைலாப்பூரைச் சேர்ந்த யாரோ ஒருவர் என்று கூறுதல் தகாது; அவர் புகழ் அவர் பிறந்த நாட்டைக் கடந்து தொலைலிலுள்ள வெளிநாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பரவிவிட்டது. -- பேராசிரியர் வின்டர்னிட்ஸ் 'ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்றங் நோய்க்கு மருந்து - என்று தலைமகளுளப்பாட்டினைக் குறித்து இப் பாலில் (காமத்துப்பாலில்) வரும் ஒரு குறளே டாக்டர் கிரெளல் என்பவரைத் தமிழ்ச் செய்யுட்களை நன்கு மதிக்கச் செய்து குறளை ஒதியுணரத் தூண்டியதாகும். குறள் தூய செந்தமிழானியன்ற தொரு நூல். ஆசிரியர் அந்நூலில் எடுத்தாண்டுள்ள பன்னிராயிரஞ் சொற்களில் ஐம்பதுகூட வட சொற்கள் தேறவில்லை. ஆங்கிலத்தில் 'பனியன்' என்பார் எழுதியுள்ள ஆங்கில நடைத் துய்மை