பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருவள்ளுவர். வர். அவர் செய்திருக்கும் 'திருக்குறள்' என்ற நூலோ ஒப்பற்ற மாபெரும் நூல். இந்தியாவில் ஆரியர்களால் எழுதப்பட்டு வழங்கி வரும் நூல்களுக்கும் திருக்குறளுக்கும் நேர்மாருன வேற்றுமை உண்டு. எனவே, திருக்குறள் முன் அவைகள் நிற்கவும் தகுதியில்லாதவை என்பது மிகையாகாது. நீதித் கும் ர்ேமைக்கும், மனிதப் பண்புக்கும் உறைவிடமாகும் மக்கள் இதனை நன்கறிவர். t தமிழ் மக்களின் காதல் மண முறையினுக்கு இலக் கணம் கூறும் நூல் தொல்காப்பியமாகும். அதில் அகப் பொருள் இலக்கணம் கூறப்பட்டிருக்கின்றது. திருக்குறளில் அவ்விலக்கணத்துக்கு இலக்கியமாகக் காமத்துப்பால்' என்னும் பகுதி அமைந்திருக்கிறது. வள்ளுவர் அதைக் 'களவு கற்பு' என்னும் பிரிவுகளில் நாடக முறையில் அமைத்திருக்கிருர், எபிரேய மக்களில் - பல கலைகளிலும் தேர்ந்த ஓர் பேரறிஞர் கி. மு. பத்தாம் நூற்றண்டில் சாலொமோன்' என்னும் பெயருடன் அரசு செலுத்தி வந்தார். தமிழ் மக்களின் அகப்பொருள் இலக்கணத்தை நன்கு கற்று எபிரேய மக்களின் காதல் மணமுறையினை விளக்க 'உன்னதப் பாட்டு' என்னும் பெயரில் ஒரு காவியம் புனைந்து இருக்கிருர். எபிரேய மொழியில் அந்நூலுக்குப் 'பாட்டுக்களின் பாட்டு' என்று பொருள்படும் பெயர் இடப் பட்டிருக்கிறது. அது 'பைபிள்' நூலில் இடம் பெற்றிருச் கிறது. அதேபோலத் தமிழர் மறையாம் திருக்குறளில் 'காமத்துப்பால்' என்னும் பகுதி அமைந்துள்ளது. எனே அது அதன் உயர்வைக் குறைப்பதாகாது. இந்தியாவிலுள்ள சமய நூல்கள், நீதிநூல்கள் முதலான