பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 31 சொந்தமானவர். தமிழ் நாட்டுக்கு:மட்டும் சொந்தமானவர் என்க் கொள்ளக்கூடாது. அதனாலேயே பாரதியும் "வள்ளுவன் தன்னை உலகினுக் கீந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு...' என்று கூறியுள்ளார். வள்ளுவர், அவர் வாழ்ந்த காலத் திற்கோ அல்லது தற்காலத்திற்கு மட்டுமோ பொருந்தும் படியான நூலே அளிக்கவில்லை. உலகம் உள்ளவரை மனிதன் திே வழுவாமல், ஒழுக்கம் குறையாமல் நடப்பதற்கான வழியைக் கூறியுள்ளார். வாழ்க்கையில் அதன்படி நடக்க முடியாவிட்டாலும் நடப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மனிதர் ஒவ்வொரு வரிடமும் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் உண்டு. நல்ல எண்ணங்களை வளர்க்கும்படியான நூல்களைப் படித்து அதன்படி நடக்க முயன்ருல் முடிவில் தீய எண்ணங்கள் ஒழியும். வள்ளுவர் குறளைச் சாதாரணமான மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் உரை எழுதவேண்டும். உரைகள் பெரிய அளவில் இருந்தால் எல்லோராலும் படிக்கமுடியாது. படிப்பதற்கு அவர்களுக்கு நேரங் கிடையாது. ஆகவே, அது சிறிய அளவில் உள்ளதாக இருக்கவேண்டும். உயர்திரு. காமராஜ் அவர்கள் (தமிழ் மாநிலத்தின் முதலமைச்சர்.)