பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 59 அவர் கூறும் முறையினைப் பின் வரும் குறள்களில் காண் கின்ருேம். பிறர் மனைவியரைத் தீண்டுதலாகிய செயற்குற்றம் ஒன்றை விட்டாலே போதும். 'அறன் வரையான் அல்ல செயினும் பிறனியலாள் பெண்மை நய்வாமை நன்று.' (தி. கு. 15.0) 2 அழுக்காறு என்ற மனக்குற்றம் ஒன்றை நீக்கிளுலே போதும். 'விழுப்பேற்றின் அ.தொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.' (தி. கு. 162) தி புறங்கூறுதல் என்ற சொற்குற்றம் ஒன்றை நீக்கிளுலே போதும். "அறங்கூருன் அல்ல செயினும் ஒருவன் புறங்கூருன் என்றல் இனிது.' (தி. கு. 181)